செங்கிடா காரசுவாமி கோவில் கொடை விழா
திசையன்விளை அருகே நாடார் அச்சம்பாடு செங்கிடா காரசுவாமி கோவில் கொடை விழா நடந்தது.;
திசையன்விளை:
திசையன்விளை அருகே நாடார் அச்சம்பாடு செங்கிடா காரசுவாமி கோவில் கொடை விழா 2 நாட்கள் நடந்தது. இதில் கணபதி ேஹாமம், கோபுர அபிஷேகம், பால்குட ஊர்வலம், மழை வேண்டி சிறப்பு அபிஷேகம், திருவிளக்கு பூஜை, சமய சொற்பொழிவு, செல்வசக்தி விநாயகர் கோவிலில் இருந்து மஞ்சள் பெட்டி ஊர்வலம், சுவாமி மஞ்சள் நீராடுதல், சுவாமி வீதிஉலா, வில்லிசை, மகுட ஆட்டம், கரகாட்டம், வாணவேடிக்கை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.