பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளுக்கு வேட்டி, சேலைகள் அனுப்பி வைப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

Update: 2022-12-26 19:00 GMT

பொள்ளாச்சி

பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளுக்கு விலையில்லா வேட்டி, சேலைகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

வேட்டி, சேலைகள்

பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றது. வருகிற 15-ந்தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் இருந்து வேட்டி, சேலைகள் தயாரிக்கப்பட்டு பொள்ளாச்சி தாலுகா அலுவலகம் மற்றும் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கு இருப்பு வைக்கப்பட்டன.

இந்த நிலையில் நேற்று முதல் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு சரக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கும் பணி தொடங்கியது. இந்த பணியை வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் ரேஷன் கடைகளில் பாதுகாப்பாக வேட்டி, சேலைகளை வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதுகுறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது:-;

ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைப்பு

பொள்ளாச்சி தாலுகா பகுதியில் 119 முழுநேர ரேஷன் கடைகளும், 49 பகுதி நேர ரேஷன் கடைகளும் செயல்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கடைகள் மூலம் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்படுகின்றன. உள்வட்டம் வாரியாக வேட்டி, சேலைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. தற்போது முதற்கட்டமாக 12,500 வேட்டிகளும், 12500 சேலைகளும் ஈரோடு மாவட்டம் தமிழ்நாடு பஞ்சாலை கழகத்தில் இருந்து கொண்டு வரப்பட்டன.

இங்கிருந்து வடக்கு உள்வட்டத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள ரேஷன் கடைகளுக்கு வேட்டி, சேலைகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. பொங்கல் பரிசுத்தொகை, அரிசி, சர்க்கரையுடன், வேட்டி, சேலைகளை வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதேபோன்று ஆனைமலை தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டு, ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்