தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு

தூத்துக்குடி மாநகராட்சிக்கு லாரிகள் மூலம் நிவாரணப் பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.;

Update: 2023-12-20 18:58 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர், போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில் தூத்துக்குடியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக சென்னை, மதுரை, திருச்சி, விருதுநகர், தென்காசி, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அரிசி, பால், பிரட், பிஸ்கட், போர்வைகள் போன்ற நிவாரணப் பொருட்கள் தூத்துக்குடி மாநகராட்சிக்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளன. பின்னர் அங்கிருந்து ஒவ்வொரு முகாம்களுக்கும் நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்