பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தொடர்பான கருத்தரங்கு

திருவண்ணாமலையில்பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தொடர்பான கருத்தரங்கு நடந்தது.

Update: 2023-07-16 11:35 GMT

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பில் மாவட்டம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கூட்டரங்கில் இமைகள் திட்டம் என்ற தலைப்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தொடர்பான கருத்தரங்கு நடைபெற்றது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமை தாங்கினார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் சவுந்தரராஜன், பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பெண் குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாத்தல், பெண் குழந்தைகள் கல்வியை தடையின்றி தொடருதல், நல்ல தொடுதல், கெட்ட தொடுதல், குழந்தை திருமணத்தை ஒழித்தல், குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தல் போன்ற பல்வேறு வகையான விழிப்புணர்வுகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

இதில் திருவண்ணாமலை குற்ற வழக்கு தொடர்பு துறை உதவி இயக்குனர் ரமேஷ், செங்கம் முதல்நிலை அரசு வழக்கறிஞர் ரமேஷ், ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், மாவட்டத்தில் பணிபுரியும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் பெண் போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்