வாழ்ந்து காட்டுவோம் திட்ட இணை மானியம் குறித்த கருத்தரங்கம்

நாகை கலெக்டர் அலுவலகத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட இணை மானியம் குறித்த கருத்தரங்கம் நடந்தது.

Update: 2022-08-13 17:58 GMT

வெளிப்பாளையம்:

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் நாகை மாவட்டத்தில் 53 ஊராட்சிகளில் செயல்படுகிறது. இந்த நிலையில் நாகை கலெக்டர் அலுவலகத்தில் இணை மானியத் திட்டம் குறித்த கருத்தரங்கம் வங்கியாளர்கள் மற்றும் பிறதுறை அலுவலர்களுடன் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தம்புராஜ் தலைமை தாங்கினார். வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் சுந்தரபாண்டியன் வரவேற்றார்.நிகழ்ச்சியில் கலெக்டர் அருண்தம்புராஜ் பேசியதாவது:- வாழ்ந்து காட்டுவோம் திட்டம் செயல்படும் ஊரக பகுதிகளில் ஏற்கனவே தொழில் செய்துவருவோர்கள் மற்றும் புதிதாக தொழில் தொடங்குவோர்கள் ஆகியோரை கண்டறிய வேண்டும். மகளிர் வாழ்வாதார சேவை மையம் மூலம் செய்து தரப்படும் தொழில் திட்டத்தின் அடிப்படையில் 30 சதவீதம் மானியத்துடன் அதிகபட்சம் ரூ.40 லட்சம் வரை வங்கிகள் வாயிலாக கடன் பெற்று தரப்படும். எனவே தொழில் முனைவோர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இதில் திட்ட இயக்குநர் பெரியசாமி, வங்கிகள், தோட்டக்கலை துறை, வேளாண்மை துறை, மீன்வளதுறை உள்பட பல துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்