பல்லுயிர் பெருக்கம் குறித்த கருத்தரங்கம்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பல்லுயிர் பெருக்கம் குறித்த கருத்தரங்கம் நடந்தது.;
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மதுரை மாவட்டம் சார்பாக கணிதவியல் மற்றும் அமைப்பு பயிற்சியும் பல்லுயிர் பெருக்க பாதுகாப்பு தின சிறப்பு கருத்தரங்கம் மதுரை மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்க அலுவலகத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மதுரை மாவட்ட தலைவர் பேராசிரியர் ராஜேஸ் தலைமை தாங்கி பேசும் போது, இந்த பூமி மனிதனுக்கு மட்டும் சொந்தமல்ல, அனைத்து உயிரினத்துக்கும் பொதுவானது என்றார்.
அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர் பேராசிரியர் ராஜமாணிக்கம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உருவாக்கப்பட்ட வரலாறு குறித்த தலைப்பில் பேசினார்.தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில தலைவர் பேராசிரியர் தினகரன் அறிவியல் இயக்கம் எந்த இலக்கை நோக்கிச் செல்கிறது என்ற தலைப்பில் பேசினார். மதுரை மாவட்ட துளிர் அறிவியல் மைய ஒருங்கிணைப்பாளர் காமேஷ், தமிழ்நாடு அறிவியல் இயக்க மதுரை மாவட்ட செயலாளர் மலர் செல்வி, .வாடிப்பட்டி வானவில் மன்ற கருத்தாளர் சுதா, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில நிர்வாகிகள் முத்துலட்சுமி, நாராயணசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.பயிற்சியில் 50-க்கும் மேற்பட்ட அறிவியல் இயக்க ஆர்வலர்களும், இல்லம் தேடிக் கல்வித் திட்டத் தன்னார்வலர்களும், வானவில் மன்ற கருத்தாளர்களும் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் எழில் நன்றி கூறினார்.