கருத்தரங்கம்

கருத்தரங்கம் நடந்தது;

Update: 2023-05-02 18:45 GMT

சிவகங்கை

தமிழ் சங்கத்தின் சார்பில் தலைவர் தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன் தலைமையிலும் மற்றும் பகீரக நாச்சியப்பன் நிறுவன தலைவர் ஜவஹர் கிருஷ்ணன் முன்னிலையிலும் கருத்தரங்கம் நடைபெற்றது. துணை தலைவர் ஞானசேகரன் அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் பால்ராஜ், முருகானந்தம், நடன சுந்தரம், இந்திரா காந்தி, ஆர்த்தி குமார், ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இதையொட்டி சிவகங்கை நம்பிக்கை அறிவுசார் குறைபாடுடையோருக்கான சிறப்பு பள்ளி இயக்குனர் சரளா கணேஷ் மற்றும் தாய் இல்ல இயக்குனர் புஷ்பராஜ் ஆகியோருக்கு சிறந்த சமூக சேவைக்கான காந்திய செம்மல் பெரி.நாகு விருது வழங்கப்பட்டது. முன்னதாக காந்திய செம்பல் பெரி நாகு படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. முடிவில் செயலாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்