பா.ஜ.க. சார்பில் சமூக நீதி கருத்தரங்கம்
பா.ஜ.க. சார்பில் சமூக நீதி கருத்தரங்கம் நடைபெற்றது.;
காரைக்குடி
டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினவிழா சமூக நீதி வாரமாக பா.ஜ.க. சார்பில் அனுசரிக்கப்பட்டது. அதனையொட்டி சமூகநீதி கருத்தரங்கம் காரைக்குடியில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க. மாநில பொருளாதார பிரிவின் தலைவர் எம்.எஸ். ஷா கலந்துகொண்டு பேசினார். கருத்தரங்கில் மாவட்ட, மண்டல அணி தலைவர்கள், நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். முன்னதாக சிவகங்கை மாவட்ட பா.ஜ.க. சார்பில் காரைக்குடியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு பா.ஜ.க.வினர் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் பா.ஜ.க. பட்டியலின தேசிய செயற்குழு உறுப்பினர் விஸ்வநாத கோபாலன், மாநில துணைத்தலைவர் ஆதீனம், மாவட்ட பொது செயலாளர் நாகராஜ், மாவட்ட துணை தலைவர் நாராயணன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சிதம்பரம், பாலமுருகன், சாக்கோட்டை ஒன்றிய தலைவர் ராமலிங்கம், நகர தலைவர் பாண்டியன் மற்றும் நகர, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.