செல்வசுந்தர காளியம்மன் கோவில் திருவிழா

செல்வசுந்தர காளியம்மன் கோவில் திருவிழா நடந்தது;

Update:2022-05-30 02:29 IST

கபிஸ்தலம்

கபிஸ்தலம் செல்வசுந்தர காளியம்மன் கோவில் திருநடன திருவிழா கடந்த 15-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து அம்மனுக்கு தினமும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மேலும், அம்மன் வீதி உலா, துர்காதேவி எல்லை வலம் வருதல், பச்சைக்காளி, பவளக்காளி வலம் வருதல், காளிகாதேவி படுகளம் வலம் வருதல், மாங்கல்ய பிச்சை தருதல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறைவாக, விடையாற்றி மற்றும் பால்குட நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனையொட்டி, கபிஸ்தலம் சத்திரம் படித்துறை காவிரி கரையில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கோவிலை அடைந்தனர். பின்னர், செல்வசுந்தர காளியம்மன் மற்றும் தண்டாயுதபாணி சுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை செல்வ சுந்தர காளியம்மன் மற்றும் தண்டாயுதபாணி சுவாமி ஊஞ்சல் உற்சவம் மற்றும் விடையாற்றி நிகழ்ச்சி நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்