படப்பை உழவர் சந்தையில் ரூ.90-க்கு தக்காளி விற்பனை
படப்பை உழவர் சந்தையில் ரூ.90-க்கு தக்காளி விற்பனை தொடங்கப்பட்டது.
தக்காளி விலை கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உத்தரவின் பேரில் குன்றத்தூர் கூட்டு பண்ணை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் மூலம் ரூ.90-க்கு படப்பை உழவர்சந்தையில் பொதுமக்களுக்கு தாக்காளி விற்பனை தொடங்கப்பட்டது. இதற்கு காஞ்சீபுரம் மாவட்ட வேளாண்மை அலுவலர் தீபா தலைமை தாங்கினார். உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இயக்குனர்கள் காவனூர் கோவிந்தன், சிறுமாத்தூர் கஸ்தூரி, நடுவீரப்பட்டு துரைசாமி, மகாண்யம் ரமேஷ், மாடம்பாக்கம் பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக குன்றத்தூர் கூட்டுப்பண்ணை உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் காவனூர் வெங்கடேசன் கலந்து கொண்டு தக்காளி விற்பனையை தொடங்கி வைத்தார். இதில் வேளாண்மை உதவி அலுவலர் மார்டின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.