சேலத்தில் உழவர் சந்தைகளில்தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்பனைவிலை குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

Update: 2023-08-04 20:15 GMT

சேலம், 

சேலத்தில் உள்ள உழவர் சந்தைகளில் தக்காளி கிலோ ரூ.80-க்கு விற்பனை ஆகின. பல நாட்களுக்கு பிறகு விலை குறைந்ததால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தக்காளி விலை உயர்வு

வெளி மாநிலங்களில் அதிக அளவு மழை பெய்ததால் சேலம் உள்ளிட்ட தமிழகத்திற்கு தக்காளி வரத்து மிகவும் குறைந்தது. சேலம் மாவட்டத்தில் செடிகளில் நோய்கள் தாக்கியதால் தக்காளி சாகுபடி பாதித்தது. இதனால் சேலத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற்கப்பட்டன.

தக்காளி விலை உயர்வால் நடுத்தர வர்க்கத்தினர் சமையலுக்கு குறைந்த அளவு தக்காளியை வாங்கி பயன்படுத்தினர். ஏழை மக்கள் தக்காளி விற்பனை செய்யும் பக்கமே திரும்பி பார்க்காத நிலை ஏற்பட்டது.

இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

இந்த நிலையில் தக்காளி தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் ஒருவருக்கு, ஒரு கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டன. இதனால் இல்லத்தரசிகள் சற்று நிம்மதியடைந்னர். ஆனால் அவர்களுக்கு தேவையான அளவு தக்காளி கிடைக்கவில்லை. சேலத்திற்கு கடந்த சில நாட்களை விட நேற்று தக்காளி வரத்து சற்று அதிகமாக இருந்தது.

இதனால் சேலத்தில் உள்ள உழவர் சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80 முதல் ரூ.95 வரை விற்கப்பட்டன. சின்ன வெங்காயம் ரூ.55 முதல் ரூ.60 வரை விற்கப்பட்டன. பெரிய வெங்காயம் ரூ.26 முதல் ரூ.30 வரை விற்கப்பட்டன. வழக்கத்தை விட தக்காளி, காய்கள் விலை சற்று குறைந்து விற்கப்பட்டதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்