கோவில் அருகே பூஞ்சை பிடித்த கெட்டுப்போன உணவு விற்பனை.. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி
திருநள்ளாறு சனிபகவான் கோவில் அருகே விற்பனை செய்யப்பட்ட கெட்டுப்போன உணவுப் பொட்டலங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;
திருநள்ளாறு,
திருநள்ளாறு நளன்குளம் அருகே தரமற்ற உணவு விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து அங்கு விரைந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
பல நாட்களுக்கு முன்பு சமைத்த உணவு, பூஞ்சை பிடித்து விற்பனை செய்யப்பட்டதை கண்டுபிடித்த அதிகாரிகள், 200-க்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு கடும் அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
தரமற்ற உணவு சுழற்சி முறையில் விற்பனை செய்யப்பட்டது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.