மதுரை செல்லூர் போலீசார் அவர்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது செல்லூர் ரெயில்வே தண்டவாளம் பகுதியில் கஞ்சா விற்பதாக தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அங்கிருந்த 5 பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், தத்தனேரியை சேர்ந்த மாரியப்பன் (வயது 22), மதன் (22), ஹரிகரன், செல்வம் உள்ளிட்ட 5 பேர் என்பதும், அவர்கள் கஞ்சா விற்றதும் தெரியவந்தது.
அதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 5 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 2 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.