திருத்தணியில் 3 ரூபாய்க்கு பிரியாணி விற்பனை: அலைமோதிய மக்கள் கூட்டம்...!

திருத்தணியில் ஒரு ஹோட்டலில் 3 ரூபாய்க்கு பிரியாணி விற்பனை செய்யப்பட்டது.;

Update: 2023-01-27 03:37 GMT

திருத்தணி,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சித்தூர் சாலையில் அசைவ ஓட்டல் ஒன்று 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த ஹோட்டலின் 3-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி வாடிக்கையாளர்களை கவரும் வகையில் 3 ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படும் என ஓட்டல் உரிமையாளர் டிஜிட்டல் பேனர் மூலம் அறிவிப்பு செய்திருந்தார்.

இதனையடுத்து நேற்று அதிகாலை முதல் அலைமோதிய அசைவ பிரியர்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து 3 ரூபாய்க்கு பிரியாணியை வாங்கி உணவகத்தில் அமர்ந்து சாப்பிட்டும், பார்சல் வாங்கி கொண்டும் சென்றனர். இதனால் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்