பெண்கள் கிரிக்கெட் அணிக்கு வீராங்கனைகள் தேர்வு

பெண்கள் கிரிக்கெட் அணிக்கு வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர்.;

Update:2023-10-16 00:15 IST


கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், பெண்கள் கிரிக்கெட் அணிக்கு வீராங்கனைகள் தேர்வு நேற்று கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்தது. தேர்வில் கலந்து கொள்வதற்காக கடலூர், நெய்வேலி, விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் 45 வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து வீராங்கனைகள் தேர்வு மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் வெங்கடேஷ் தலைமையில் நடந்தது. வீராங்கனைகளை பந்து வீச்சு, பேட்டிங், ஆல்ரவுண்டர் முறையில் தேர்வாளர்கள் தேர்வு செய்தனர். இறுதியில் அவர்களில் 30 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி, அதில் 15 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்கள் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 29-ந்தேதி சிவகங்கையில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் கலந்து கொள்வார்கள் என்று கிரிக்கெட் சங்க செயலாளர் கூத்தரசன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்