மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு வீரர்கள் தேர்வு

மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.;

Update:2023-04-17 00:06 IST

13 வயதிற்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் விருதுநகரில் அடுத்த மாதம் 16-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், டிரிப்ளிங், பிரி த்ரோ, லேயப்போட்டி, ஜெர்மன் ரிளே உள்ளிட்ட பயிற்சிகளில் சிறந்து விளங்கிய 24 மாணவ- மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை அரியலூர் மாவட்ட கூடைப்பந்து விளையாட்டு கழகத்தின் தலைவர் பூமிநாதன், செயலாளர் சாமுவேல், பொருளாளர் தினேஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்