மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கபடி அணிக்கு வீரர்கள் தேர்வு- நாளை பதிவு செய்ய அழைப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கபடி அணிக்கு வீரர்கள் தேர்வு நாளை பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.;

Update:2023-09-08 00:23 IST

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளுக்கான கபடி போட்டிக்கு அனைத்து வயதினருக்கான (ஒபன் டூ ஆல்) வீரர்கள் தேர்வு போட்டிகள் பெரம்பலூரில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு நடக்கிறது. இந்த தேர்வு போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் மாற்றுத்திறனாளி வீரர்கள் தங்களது ஆதார்அட்டை அசல் மற்றும் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2 தபால் தலையளவு புகைப்படம்-2, மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை அசல் மற்றும் நகல் ஆகியவற்றை எடுத்து வந்து நாளை (சனிக்கிழமை) காலை 8 மணிக்குள் தங்களது வருகையை பதிவு செய்திடவேண்டும் என்று மாற்றுத்திறனாளிகளுக்கான பாராஒலிம்பிக் பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்