மானூர் யூனியன் பஞ்சாயத்துகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு

மானூர் யூனியன் பஞ்சாயத்துகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.;

Update: 2022-07-28 19:54 GMT

பேட்டை:

நெல்லை மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியம் அனைத்து ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு தொடங்குவது தொடர்பான கூட்டம் மானூர் ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் நடந்தது. இதில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டமைப்பு தலைவராக பேட்டை ரூரல் ஊராட்சி தலைவர் சின்னதுரை, செயலாளராக தாழையூத்து ஊராட்சி தலைவர் பீர்முகைதீன், பொருளாளராக மூவிருந்தாளி ஊராட்சி தலைவர் வெள்ளப்பாண்டியும், துணைத்தலைவர்களாக ஆஷாதேவி, சுப்பிரமணியன், இணை செயலாளராக சுப்புலட்சுமி, துணை செயலாளர்களாக சேர்மகனி, பராசக்தி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் அனைவரும் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்கிருஷ்ணனிடம் வாழ்த்து பெற்றனர். இதில் அனைத்து ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்