கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு
கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு 12-ந் தேதி நடக்கிறது;
கள்ளக்குறிச்சி
கள்ளகுறிச்சி மாவட்ட அளவிலான கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வு இந்திலியில் உள்ள டாக்டர். ஆர்.கே.எஸ் கல்லூரி மைதானத்தில் வருகிற 12-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. இதில் 14 மற்றும் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான மாவட்ட அணி தேர்வு செய்யப்பட உள்ளது. 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான தேர்வு வருகிற 12-ந் தேதி காலை 8.30 மணிக்கும், 16 வயதுகுட்பட்டவர்களுக்கான தேர்வு மதியம் 1.00 மணிக்கும் நடைபெறவுள்ளது. இதில் 14 வயதுகுட்பட்டோர் பிரிவில் 1.9.2009 அன்றோ அல்லது அதற்கு பிறகோ, 16 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 1.9.2007 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பிறந்திருக்க வேண்டும். இத்தேர்வில் பங்குபெறும் அனைத்து வீரர்களும் பிறப்பு சான்றிதழ் நகல் சமர்ப்பிக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் லட்சுமி நாராயணன் தெரிவித்துள்ளார்.