வேளாண் அலுவலர் பணிக்கான தேர்வு; 83 பேர் எழுதினர்
வேளாண் அலுவலர் பணிக்கான தேர்வை 83 பேர் எழுதினர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் வேளாண் அலுவலர் பணிக்கான போட்டி தேர்வு நேற்று நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த தேர்வினை எழுத 110 தேர்வாளர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்கள் தேர்வு எழுத பெரம்பலூர் அருகே எளம்பலூரில் உள்ள தந்தை ரோவர் பொறியியல் கல்லூரியில் மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் என 2 பிரிவுகளாக தேர்வு நடந்தது. கணினியில் ஆன்லைன் மூலம் நடந்த இந்த தேர்வினை 83 பேர் எழுதினர். 27 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு எழுத ஹால் டிக்கெட் தவிர எந்த பொருட்களும் கொண்டு செல்ல தேர்வாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.