500 கிலோ ரேஷன் அரிசி காருடன் பறிமுதல்

500 கிலோ ரேஷன் அரிசி காருடன் பறிமுதல்

Update: 2022-06-14 17:23 GMT

களியக்காவிளை:

களியக்காவிளை போலீசார் ஒற்றாமரம் சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் காரை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர் மார்த்தாண்டத்தை அடுத்த உண்ணாமலைக்கடை ஆயிரம் தெங்கு பகுதியைச் சேர்ந்த ரெஞ்சித் (வயது 41) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து ரேஷன் அரிசியை காப்புக்காடு அரசு குடோனிலும், காரை விளவங்கோடு தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்