அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்
அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
காரியாபட்டி,
திருச்சுழி அருகே ராஜகோபாலபுரம் கிராம பகுதியில் பரளச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ராஜகோபாலபுரம் கண்மாய் பகுதியில் நின்று கொண்டிருந்த டிராக்டரை சோதனை செய்ய முற்பட்ட போது டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். டிராக்டரை சோதனை செய்ததில் அனுமதியின்றி மணல் ஏற்றி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.