புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது
கடையம் பகுதியில் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
கடையம்:
கடையம் அருகே காளத்திமடத்தில் உள்ள பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகயிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடையம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆலங்குளம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த குமாரசாமி மகன் சிவா (வயது 22) என்பவர் ஆலங்குளம் பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்த பெரியமுத்து மகன் பொன் பிரபாகரனிடம் புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிவா மற்றும் பொன் பிரபாகரனை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 50 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.