மணல் கடத்தல் மினிலாரி பறிமுதல்
திருவெண்ணெய்நல்லூர் அருகே மணல் கடத்தல் மினிலாரி பறிமுதல்;
திருவெண்ணெய்நல்லூர்
திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள ஆனத்தூர் கிராமத்தில் மலட்டாறு பகுதியில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினி லாரியை வழிமறித்தனர்.உடனே டிரைவரும், அவருடன் வந்தவரும் லாரியை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு இறங்கி தப்பி ஓடிவிட்டனர். விசாரணையில் மலட்டாறு பகுதியிலிருந்து மணல் கடத்தி வந்ததும், தப்பி ஓடியவர்கள் பண்ருட்டியை சேர்ந்த காசிமணி மகன் வேலு, ஆனத்தூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் நத்தக்கறி என்கிற மணிகண்டன் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து மினி லாரியை பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய இருவரையும் தேடி வருகிறார்கள்.