சூளகிரி வழியாக கர்நாடகாவிற்கு லாரியில் கடத்த முயன்ற20 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

சூளகிரி வழியாக கர்நாடகாவிற்கு லாரியில் கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-06-17 16:18 GMT

கிருஷ்ணகிரி:

சூளகிரி வழியாக கர்நாடகாவிற்கு லாரியில் கடத்த முயன்ற 20 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

ரேஷன் அரிசி கடத்தல்

கிருஷ்ணகிரி மாவட்ட வழங்கல் அலுவலர் கோபு தலைமையில் கிருஷ்ணகிரி பறக்கும் படை தாசில்தார் கவாஸ்கர், வருவாய் ஆய்வாளர் சதீஷ், உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன், சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு மற்றும் போலீசார் கிருஷ்ணகிரி- ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சூளகிரி அடுத்த சப்படி வழியாக வந்த டாரஸ் லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில், 50 கிலோ கொண்ட 396 மூட்டைகளில், 19 ஆயிரத்து, 800 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது தெரிந்தது. இதையடுத்து லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

டிரைவர் கைது

அப்போது அவர் தர்மபுரி மாவட்டம் சோமனஅள்ளியை சேர்ந்த மணிவண்ணன் (வயது 23) என்பது தெரியவந்தது.  அப்போது ஈரோடு, பெருந்துறை பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடகாவில் அதிக விலைக்கு விற்பதற்காக கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். போலீசார் லாரியுடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்