அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த மோட்டார் சைக்கிள் பறிமுதல்

அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த மோட்டார் சைக்கிள் பறிமுதல்;

Update: 2022-09-24 18:45 GMT

நீடாமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விவவேகானந்தம், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் மணல் ஏற்றி கொண்டு வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் வலங்கைமான் வட்டம் நார்த்தாங்குடி பெரியதெருவை சேர்ந்த பாண்டியன் (வயது33) என்பதும், அவர் மோட்டார்சைக்கிளில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியனை கைது செய்து அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்