ரேஷன் அரிசி கடத்திய கார் பறிமுதல்; 2 பேர் கைது

திசையன்விளை அருகே ரேஷன் அரிசி கடத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-01-19 21:37 GMT

திசையன்விளை:

உவரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் உவரி சோதனைச்சாவடி அருகே வாகன சோதனை நடத்தினர். அப்போது உவரியில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 30 மூடைகள் ரேஷன் அரிசி இருப்பதை கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக காரில் இருந்த மேல சாத்தான்குளம் கணேசபாண்டி மகன் ராஜாசிங் (வயது 19), களியக்காவிளை மாடில்கவிளை தங்கராஜ் மகன் மாரிமுத்து (வயது 38) ஆகியோரை கைது செய்தனர். ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து நெல்லையில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ரேஷன் அரிசி கடத்தி வந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸ் விசாரணையில் இதை கேரளாவிற்கு கடத்தி செல்ல இருந்தது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்