ரூ.2 லட்சம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

சிவகாசி மாநகராட்சி பகுதியில் ரூ.2 லட்சம் மதிப்புடைய தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், ரூ.95 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.;

Update: 2023-05-07 19:01 GMT

சிவகாசி, 

சிவகாசி மாநகராட்சி பகுதியில் ரூ.2 லட்சம் மதிப்புடைய தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், ரூ.95 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

அதிகாரிகள் ஆய்வு

சிவகாசியில் உள்ள சில நிறுவனங்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்து வெளியூர்களுக்கு அனுப்பி வைத்து வருவதாக மாநகராட்சி கமிஷனர் சங்கரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் சுகாதார அதிகாரிகள் பாண்டியராஜன், முத்துப்பாண்டி ஆகியோர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை செய்தனர். இதில் சாத்தூர் ரோட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

பிளாஸ்டிக்பொருட்கள் பறிமுதல்

இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேஷ் கண்ணன் என்பவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இதேபோல் சிவகாசி பி.கே.என்.ரோட்டில் உள்ள 2 கடைகளில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மொத்த விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அந்த பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.45 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.95 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்