3,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

அரக்கோணம் அருகே 3,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-06-03 16:49 GMT

அரக்கோணம்

அரக்கோணத்தை அடுத்த அன்வர்திகான்பேட்டை பகுதிகளில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீஸ் துணை சூப்பிரண்டு நந்தகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன், ஷெர்புதீன், போலீஸ்காரர் சுந்தர் ஆகியோர் அன்வர்திகான்பேட்டை பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த மினி லாரியை சோதனை செய்த போது அதில் சுமார் 3,500 கிலோ எடை கொண்ட 70 மூட்டைகள் இருந்தன. அவை ஆந்திராவுக்கு கடத்துவதுவதற்காக இருந்ததும் தெரியவந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்து, வழக்கு பதிந்து கடத்தலில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்