திருவட்டார் அருகே மண் கடத்திய 3 டெம்போக்கள், பொக்லைன் எந்திரம் பறிமுதல் வாலிபர் கைது

திருவட்டார் அருகே மண் கடத்திய 3 டெம்போக்கள், பொக்லைன் எந்திரம் பறிமுதல் செய்து வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-11 19:15 GMT

திருவட்டார்:

திருவட்டார் அருகே உள்ள வீயன்னூரை அடுத்த வெட்டுக்குழியில் மண் கடத்துவதாக போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சுதர்சன், டேவிட் ராஜ் மற்றும் போலீசார் வெட்டுக்குழி பகுதிக்கு சென்றனர். அப்போது தனியார் நிலத்தில் 3 டெம்போக்கள் நிறுத்தப்பட்டிருந்தன. மேலும் பொக்லைன் எந்திரம் மூலம் சரல் மண் அள்ளி டெம்போவில் போட்டுக்கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் டெம்போவில் இருந்த டிரைவர்கள் இறங்கி தப்பி ஓடினர். பொக்லைன் எந்திரத்தை இயக்கிக் கொண்டிருந்த மேக்கமண்டபம் கீழ மரவூர்கோணத்தைச்சேர்ந்த வினு (வயது27) என்பவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அனுமதியின்றி சரல் மண் அள்ளி கடத்த முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து 3 டெம்போவையும், பொக்லைன் எந்திரத்தையும் போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அத்துடன் பிடிபட்ட வினுவை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து நிலத்தின் உரிமையாளர் விபின் மீது திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் ஜானகி விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்