2 இடங்களில் 20 யூனிட் மணல் பறிமுதல்

பிரம்மபுரம் பகுதியில் 2 இடங்களில் 20 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-06-23 17:18 GMT

காட்பாடி அருகே பிரம்மபுரம் பகுதியில் உள்ள காலிமனைகளில் பாலாற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்து குவித்து வைத்து இருப்பதாக காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாசில்தார் ஜெகதீஸ்வரன் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். அப்போது 2 இடங்களில் 20 யூனிட் மணலை மாட்டு வண்டிகளில் கொண்டு வந்து குவித்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மணலை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த மணல் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்