ஆம்பூர் அருகே 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஆம்பூர் அருகே 2 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.;

Update: 2022-06-11 15:23 GMT

ஆம்பூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கன்னிகாபுரம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்துவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து அப்பகுதியில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதில் வெளிமாநிலத்திற்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 டன் ரேஷன் அரிசி மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களை திருப்பத்தூர் மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்