மத்தூர் அருகே கேட்பாரற்று நின்ற மோட்டார் சைக்கிள் பறிமுதல்

Update: 2022-09-25 18:45 GMT

மத்தூர்:

மத்தூர் போலீசார் சலஜோகிப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள தண்ணீர் தொட்டி அருகே மோட்டார் சைக்கிள் ஒன்று கேட்பாரற்று நின்றது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் மோட்டார் சைக்கிள் யாருடையது? என தெரியவில்லை. இதையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் அது யாருடையது?, குற்ற செயலுக்காக பயன்படுத்தப்பட்டதா? என விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மேலும் செய்திகள்