பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்

பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்;

Update:2022-09-09 01:07 IST

ஒரத்தநாடு

ஒரத்தநாட்டை அடுத்துள்ள கிளாமங்கலம் குஞ்சான் தெருவை சேர்ந்த ராஜமாணிக்கம் மகள் கலைமதி (வயது21). இவர் ஒரத்தநாடு அரசு பெண்கள் கலை கல்லூரியில் பி.லிட் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரும், பேராவூரணி பழைய நகரம் பகுதியை சேர்ந்த முருகதாஸ் மகன் விசித்திரன் (27) என்பவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் எதிர்ப்பு ெதரிவித்தனர். இதனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய விசித்திரனும், கலைமதியும் மன்னார்குடியில் உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். நேற்று மாலை பாதுகாப்பு கேட்டு இந்த காதல் ஜோடி ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதையடுத்து போலீசார் இருதரப்பு பெற்றோர்களையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். அதன் பிறகு கல்லூரி மாணவியை அவர் விரும்பியபடி காதல் கணவருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்