விவசாயிகளுக்கு மானிய விலையில் பழக்கன்றுகள்
விவசாயிகளுக்கு மானிய விலையில் பழக்கன்றுகள் வழங்கப்பட்டன.;
நாகை மாவட்டம் திருமருகல் வட்டார உதவி தோட்டக்கலை அலுவலர் செல்ல பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருமருகல் வட்டார விவசாயிகள் சாகுபடி பரப்பை அதிகரிக்கவும் அதன்பின் அவர்கள் வருமானம் பெருக்கும் நோக்கத்துடன் மானிய விலையில் பழக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது. அதன்படி மா அல்லது பலா, எலுமிச்சை, பெருநெல்லி, கொய்யா, சீத்தா உள்ளிட்ட பழக்கன்றுகள் வழங்கப்படும். இதில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் ரூ.50 மட்டும் செலுத்தி ஆதார் அட்டை எண்ணுடன், 9952329863 என்ற எண்ணிற்கு வாட்ஸ்-ஆப் மூலம் பதிவு செய்து செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.