விதைநேர்த்தி செய்து நெல் விதைகளை பயிரிட வேண்டும்
குறுவை சாகுபடிக்கு விதைநேர்த்தி செய்து நெல் விதைகளை பயிரிட வேண்டும் என வேளாண்மை உதவி இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.;
நீடாமங்கலம்:
குறுவை சாகுபடிக்கு விதைநேர்த்தி செய்து நெல் விதைகளை பயிரிட வேண்டும் என வேளாண்மை உதவி இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குறுவை சாகுபடி
நீடாமங்கலம் வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) ஆர்.சுரேஷ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குறுவை சாகுபடிக்கு தயாராக உள்ள விவசாயிகள் நெல் விதைகளை கட்டாயம் விதை நேர்த்தி செய்ய பயிரிட வேண்டும். 1 கிலோ விதைகளுக்கு 2 மி.லிட்டர் தண்ணீரில் கார்பென்டாசிம் அல்லது பைரோகுயிலன் அல்லது டிரைசைக்ளோசோல் கரைசலில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
விதைகளை 10 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, அதிகப்படியான தண்ணீரை வடிகட்ட வேண்டும்.
விதைநேர்த்தி
இந்த ஈர விதை நேர்த்தியானது நாற்றுகளுக்கு நோயில் இருந்து 40 நாட்கள் வரை பாதுகாப்பு அளிக்கிறது. மற்றும் உலர் விதை நேர்த்தியை விட இந்த முறை சிறந்தது.
உடனடியாக விதைப்பதற்கு விதைகள் தேவைப்பட்டால், ஊறவைத்த விதையை இருட்டில் வைத்து, கூடுதல் வைக்கோல் அல்லது சணல் சாக்குகளை கொண்டு மூடி 24 மணிநேரம் முளைக்க விட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
----