மழைமுத்து மாரியம்மன் கோவிலில் செடில் உற்சவம்
விழுந்தமாவடி மழைமுத்து மாரியம்மன் கோவிலில் செடில் உற்சவம் நடந்தது.
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணியை அடுத்த விழுந்தமாவடியில் உள்ள மழைமுத்து மாரியம்மன் கோவிலில் சித்திரை பெருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடில் உற்சவம் நடைபெற்றது. 30 அடி உயரம் உள்ள செடில் மரத்தில், வேண்டுதல் நிறைவேற நூற்றுக்கணக்கானோர் தங்கள் குழந்தைகளை செடிலில் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். .இதனை தொடர்ந்து அலகு காவடி, பாடை காவடி, ரதகாவடி மற்றும் பால்காவடி, உள்ளிட்ட காவடிகளை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதையடுத்து அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.