அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்
துணை தாசில்தார் மீது தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கடலூரில் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.;
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கடலூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருச்சி மாவட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.22 கோடி கடன் பெற்ற தனியார் நிறுவனம் செயல்படாமல் தற்போது மூடப்பட்டுள்ளது. இந்த கடனை அரசு உத்தரவின்பேரில் வசூலிக்க சென்ற துணை தாசில்தார் சமூக விரோதிகளால் தாக்கப்பட்டு உள்ளார். அந்த வன்முறை கும்பல் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் அரசு உத்தரவை ஏற்று இது போன்ற பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில பொருளாளர் கு.சரவணன் உடனிருந்தார்.