வரி செலுத்தாத 2 வணிக நிறுவனங்களுக்கு 'சீல்' வைப்பு
நெல்லையில் வரி செலுத்தாத 2 வணிக நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.;
நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் மாநகர பகுதிகளில் வரி செலுத்தாத குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களிடமிருந்து வரி வசூல் செய்யும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் மாநகர பகுதியில் நீண்ட காலமாக சொத்துவரி செலுத்தாத 2 வணிக நிறுவனங்களுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. அதேபோல் 3 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.