பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய ஓட்டலுக்கு 'சீல்'

ஊட்டியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய ் ஓட்டலுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் 2 சுற்றுலா பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2022-11-18 18:45 GMT

ஊட்டி, 

ஊட்டியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய ் ஓட்டலுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் 2 சுற்றுலா பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஓட்டலுக்கு சீல்

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்குகளை பாதுகாக்கும் வகையில், 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன. இதையடுத்து கலெக்டர் அம்ரித் உத்தரவின் படி, நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் தலைமையில் நகராட்சி சுகாதார துறையினர் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அதன்படி நேற்று அதிகாரிகள் சோதனை நடத்தியதில், ஊட்டி காந்தல் ஹவுசிங் யூனிட் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் பிளாஸ்டிக் பயன்படுத்தியது தெரியவந்தது. தொடர்ந்து அந்த ஓட்டலுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் 2 பஸ்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பஸ்களுக்கும் தலா ரூ.2,000 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய 5 தங்கும் விடுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

இதற்கிடையே அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகள் நடக்கும் இடத்தில் பிளாஸ்டிக் கப்புகள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். ஆனால், அபராதம் செலுத்த முடியாது என பொதுப்பணித்துறையினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்