அனுமதியின்றி நடத்திய இ-சேவை மையத்துக்கு 'சீல்'

அனுமதியின்றி நடத்திய இ-சேவை மையத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.;

Update: 2022-08-18 13:04 GMT

கலவை பேருராட்சி வாழைப்பந்த சாலையில் சார்பதிவாளர் அலுவலகம் அருகே இ- சேவை மையம் செயல்பட்டு வந்தது. இங்கு பொதுமக்கள் சான்றிதழ் உள்ளிட்டவைகளுக்கு பதிவு செய்ய அரசு நிர்ணயத்த கட்டணத்தைவிட அதிக கட்டணம் வசூல் செய்வதாக தாசில்தாரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

இந்த புகாரின் பேரில் தாசில்தார் விசாரணை நடத்தினார். விசாரணையில் அரசு அனுமதியின்றி இ-சேவை மையம் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. மேலும் வேறு ஒரு இ-சேவை மையத்திற்கு பெறப்பட்ட இணையதளம் மூலம் இந்த இ-சேவை மையம் இயங்கி வந்ததும் தெரிந்தது. அதைத்தொடர்ந்து இ-சேவை மையத்தை மூடி சீல் வைக்க தாசில்தார் சமீம் உத்தரவிட்டார். அதன்பேரில் தலைமையிடத்து துணை தாசில்தார் இளையராஜா, வருவாய் ஆய்வாளர் வீரராகவன் ஆகியோர் இ-சேவை மையத்தை பூட்டி சீல் வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்