சர்வதேச கடற்கரை தூய்மை தின நிகழ்ச்சி
சேதுபாவாசத்திரம் அருகே சர்வதேச கடற்கரை தூய்மை தின நிகழ்ச்சி நடந்தது
சேதுபாவாசத்திரம்;
சேதுபாவாசத்திரம் கடலோர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மனோரா படகு இறங்குதளம், மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் ஆகிய இரு இடங்களிலும், சர்வதேச கடற்கரை தூய்மை நாளை முன்னிட்டு தூய்மைப்பணி நடந்தது. பட்டுக்கோட்டை கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் மஞ்சுளா தலைமையில் தூய்மைப் பணி நடந்தது. இதில், கடலோர காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், ராஜசேகர், மீன்வளத்துறை ஆய்வாளர் கெங்கேஸ்வரி, ஓம்கார் பவுண்டேஷன் பாலாஜி, அதிராம்பட்டினம் காதிர்முகைதீன் கல்லூரி மாணவ, மாணவிகள், பள்ளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கடற்கரையை சுத்தம் செய்தனர்.