எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதியை இடித்ததை கண்டித்து கோவையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.;

Update: 2022-12-06 18:45 GMT

உக்கடம்

பாபர் மசூதியை இடித்ததை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கோவை உக்கடத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் முஸ்தபா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் அப்துல் காதர், வர்த்தக அணி மாநில செயலாளர் அப்துல் ஹரீம், மாவட்ட தலைவர் அப்துல் ரகீம், பொருளாளர் முகமது இக்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, பாபர் மசூதியை இடித்துவிட்டு அதில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. எனவே நாட்டில் உள்ள மதசார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து பாபர் மசூதி இருந்த இடத்தை மீட்டுத்தர வழிவகை செய்ய வேண்டும் என்றார்.இதில் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கார்த்திக் மற்றும் எஸ்.டி.பி.ஐ.யை சேர்ந்த முகமது இசாக், செய்தி தொடர்பாளர் மன்சூர் மற்றும் ஏராளமான பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்