முதியவருக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது

முதியவருக்கு அரிவாளால் வெட்டியது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-09-23 19:36 GMT

சமயபுரம்:

சிறுகனூர் அருகே உள்ள வலையூர் கீழத்தெருவை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 58). இவரது வீட்டுக்கு அருகில் உள்ள புறம்போக்கு நிலத்தை பல ஆண்டுகளாக சுந்தரம் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த அழகுமுத்துவின் மகன்கள், அந்த நிலம் தங்களுடைய முன்னோர்கள் சொத்து என்று கூறி, அதனை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட வாக்குவாதத்தில் சுந்தரத்தை அழகுமுத்துவின் மனைவி ஜோதி(60) மற்றும் அவரது மகன்கள் தர்மர் (30), ராஜேஷ் (28), பாரதிராஜ் (25) ஆகியோர் தாக்கி அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் அவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின்பேரில் சிறுகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர் வழக்குப்பதிவு செய்து பாரதிராஜை கைது செய்தார். மேலும் 3 பேரை தேடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்