மயிலம் அருகே முதியவருக்கு அரிவாள் வெட்டு

மயிலம் அருகே முதியவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

Update: 2023-09-03 18:45 GMT

மயிலம், 

திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த வர் ரவிக்குமார்(வயது 70). இவர் நேற்று இரவு மயிலம் அருகே உள்ள கேணிப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவர் வைத்திருந்த பையை பறிக்க முயன்றனர். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள் தாங்கள் வைத்திருந்த அரிவாளால், ரவிக்குமாரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் பலத்த காயமடைந்த அவரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மயிலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்