தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
மயிலாடுதுறை அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு தந்தை கைது
மயிலாடுதுறை அருகே உள்ள உளுத்துக்குப்பை செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது60). செங்கல் சூளை தொழிலாளி. இவருடைய மகன் அருள்பாண்டி (25). தொழிலாளி. கடந்த சில மாதங்களாக ஏழுமலை, செங்கல் சூளையில் தனக்கு உதவியாக வேலைக்கு வரும்படி அருள்பாண்டியை அழைத்து வந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்ததால் அருள்பாண்டிக்கும், ஏழுமலைக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் நடந்த தகராறில் ஏழுமலை அரிவாளால் அருள்பாண்டியை சரமாரியாக வெட்டினார். இதில் தலை, கால்களில் படுகாயம் அடைந்த அருள்பாண்டியை தாய் லதா மற்றும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து லதா கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர்.