விவசாயிக்கு அரிவாள் வெட்டு
திருக்குறுங்குடி அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.;
ஏர்வாடி:
திருக்குறுங்குடி அருகே உள்ள மலையடிபுதூர் கீழ தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 62). விவசாயி. இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த தளவாய் பாண்டியன் மகன் வெங்கடேசுக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்தது.
சம்பவத்தன்று மலையடிபுதூர் அய்யா கோவில் தெருவில் சுப்பிரமணியன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அங்கு வந்த வெங்கடேஷ் திடீரென்று சுப்பிரமணியனை வழிமறித்து தகராறு செய்து அவரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த சுப்பிரமணியனுக்கு களக்காடு அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில், திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான வெங்கடேசை வலைவீசி தேடி வருகின்றனர்.