பஞ்சாயத்து தலைவருக்கு அரிவாள் வெட்டு

சாத்தூர் அருகே பஞ்சாயத்து தலைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது;

Update: 2023-10-05 18:45 GMT

சிவகாசி

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓ.மேட்டுப் பட்டி பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் மாதவராஜ் (வயது 54). இவருக்கும் இவரது வீட்டின் அருகில் வசிக்கும் லாரி டிரைவர் பால முருகன் (48) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மது போதையில் மாதவராஜ் வீட்டிற்கு வந்த பாலமுருகன் மாதவராஜை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார்.

அப்போது சுதாரித்துக்கொண்ட மாதவராஜ் அரிவாள் வெட்டை தடுத்தபோது பஞ்சாயத்து தலைவருக்கு கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. உடனே அவரது சத்தம் கேட்டு அக்கம்- பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்துள்ளனர். இதனால் பாலமுருகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் பஞ்சாயத்து தலைவர் மாதவராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பஞ்சாயத்து தலைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் சாத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்