2 பேருக்கு அரிவாள் வெட்டு; வாலிபர் கைது
திசையன்விளை அருகே 2 பேரை அரிவாளால் வெட்டியதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள ஆமையடி தெற்கு தெருவை சேர்நதவர் மதியழகன் (வயது 56). இவருக்கும், கஸ்தூரி ரெங்கபுரம் வடக்கு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த இசக்கிமுத்து மகன் கருப்பசாமி (29) என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று மதியழகன், அவரது நண்பர் ஆமையடி வேதக்கோவில் தெருவை சேர்ந்த கிறிஸ்டோபர் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கருப்பசாமி, மதியழகன் சாதியை கூறி பேசி கொலை மிரட்டல் விடுத்து அரிவாளால் வெட்டியுள்ளார். அப்போது அதை தடுத்த கிறிஸ்டோபருக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. மேலும் மோட்டார் சைக்கிளையும் அடித்து சேதப்படுத்தியதாக மதியழகன், திசையன்விளை போலீசில் புகார் செய்தார். வள்ளியூர் போலீஸ் துணை சூப்பிரண்டு போகேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தார்.