அஞ்செட்டி அருகேசொத்து தகராறில் தந்தை-மகன்களுக்கு அரிவாள் வெட்டு

Update: 2023-05-23 05:30 GMT

தேன்கனிக்கோட்டை

அஞ்செட்டி அருகே உள்ள தக்கட்டி கிராமத்தை சேர்ந்தவர் நரசப்பா. இவரது மகன்கள் நரசராஜ் (32), சிக்கநரசன் (29). விவசாயிகள். இவர்களுக்கு 6 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. நரசப்பாவின் சகோதரிகளான சிக்கநரசம்மா, சித்தம்மா ஆகியோர் தங்களுக்கும் சொத்தில் பங்கு வேண்டும் என நரசப்பா குடும்பத்தினரிடம் கேட்டு வந்துள்ளனர். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் சிக்க நரசம்மா அவரது மகன்கள் பையராஜ், கங்காதரன் மற்றும் சித்தம்மா, அவரது மகன்கள் நரசிம்மன், குமரேசன் என்ற போரப்பா ஆகியோர் நரசப்பாவிடம் தகராறு செய்துள்ளனர். அப்போது இருதரப்பினரும் தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த பையராஜ், கங்காதரன், நரசிம்மன், குமரேசன் ஆகியோர் தரப்பினர், நரசப்பா மற்றும் அவரது மகன்களான நரசராஜ், சிக்க நரசன் ஆகியோரை அரிவாளால் வெட்டினர். இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்